ҽ

சூடான் குழந்தைகள் சூடான் குழந்தைகள்   (AFP or licensors)

சூடானில், மூன்று நாட்களில் குறைந்தது 40 குழந்தைகள் பலி!

அனைத்துலக மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து குழந்தைகளைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ள யுனிசெஃப் நிறுவனம், மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு தனது அறிக்கையில் வலியுறுத்துத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த மூன்று நாட்களில், சூடானின் தெற்கு கோர்டோபான், டார்பூர் மற்றும் கார்டூம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளால் ஏறத்தாழ 40 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 900-க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 80 விழுக்காடு கொலைகள் மற்றும் ஊனங்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளை ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்நிறுவனம்.

அங்கு அமைதிக்கான அழைப்புகள் இருந்தபோதிலும், வன்முறை தொடர்கிறது என்று உரைக்கும் அதன் அறிக்கை, மருத்துவமனைகள் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள்-நட்பு இடங்களை (child-friendly spaces) குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் வேதனைத் தெரிவிக்கிறது.

அனைத்துலக மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து குழந்தைகளைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ள யுனிசெஃப் நிறுவனம், அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 பிப்ரவரி 2025, 16:39