ҽ

கசியும் கண்ணீருடன் ஒரு பெண் கசியும் கண்ணீருடன் ஒரு பெண்   (AFP or licensors)

இலங்கையில் பயங்கரவாத சட்டத்தை நீக்கக் கோரும் வழக்கறிஞர் குழு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையின் புதிய அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யுமாறு சட்ட வழக்கறிஞர் மன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மூன்றாம் தேதி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையொன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான உறுதிமொழியை அரசுத் தலைவர் அனுரகுமார திஸநாயக்க மதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

பயங்கரவாத தடைச்சட்டம் தக்கவைக்கப்படட்டும், ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்படாது என்று அரசு அதிகாரிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்களின் அண்மைய அறிக்கைகள் குறித்து வழக்கறிஞர் மன்றம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது என்றும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.

செப்டம்பர் மாதம் நிகழ்ந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதன் முறைகேடுகளுக்கு எதிராக அவரது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தீவிரமாக வாதிட்டதை அரசுத் தலைவருக்கு நினைவுபடுத்தும் வகையில், "இது மிகவும் கவலைக்குரியது" என்று வழக்கறிஞர்கள் மன்றம் கூறியதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

அரசியல் சார்பற்ற சட்ட சகோதரத்துவம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவ்வழக்கறிஞர் மன்றம், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய அடுத்த பாராளுமன்றத்தில் பல கட்சி ஆதரவை உறுதி செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2024, 14:02