ҽ

பாலஸ்தீனக் குழந்தைகள் பாலஸ்தீனக் குழந்தைகள் 

வீடுகளுக்குள்ளேயே 40 கோடி குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர்

சில நாடுகளில் குழந்தைகள் உடலளவில் தண்டிக்கப்படுவது தடைச் செய்யப்பட்டுள்ள போதிலும், ஏறக்குறைய 50 கோடி குழந்தைகளுக்கு இந்த சட்ட பாதுகாப்பு இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகில் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே ஏறக்குறைய 40 கோடி குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும், ஒழுங்குமுறைப்படுத்துகிறோம் என்ற போர்வையில் வன்முறையாக ஊறுவிளைவிக்கப்படுவதாக UNICEF என்ற குழந்தைகள் நிதியமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஜூன் 11 அன்று உலகம் முழுவதும் முதன்முறையாக சிறப்பிக்கப்படும் குழந்தைகளுக்கான உலக விளையாட்டு நாளையொட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ள இந்த ஐ.நா. அமைப்பு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நாற்பது கோடி பேர், அதாவது அந்த வயதினருள் 60 விழுக்காட்டினர், அவர்களுக்கு ஒழுக்க நடைமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறோம் என்ற பெயரில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அதில் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை 100 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக உரைக்கும் இவ்வறிக்கை, மனதளவிலும், உடலளவிலும் காயம் வெளியில் தெரியாதவாறு குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என தெரிவிக்கிறது.

துன்புறுத்தலுக்கு உள்ளாகும் 40 கோடி குழந்தைகளுள் 33 கோடி பேர் உடலளவில் துன்பத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் குழந்தைகள் உடலளவில் தண்டிக்கப்படுவது தடைச் செய்யப்பட்டுள்ள போதிலும், ஏறக்குறைய 50 கோடி குழந்தைகளுக்கு இந்த சட்ட பாதுகாப்பு இல்லை எனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2024, 14:16