ҽ

வெப்ப அலை வெப்ப அலை   (2023 Getty Images)

தெற்காசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை!

தெற்காசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை, குழந்தைகள் பாதுகாக்கப்படாவிட்டாலோ அல்லது நீரேற்றம் செய்யப்படாவிட்டாலோ, அது அவர்களில் இலட்சக் கணக்கானோரின் உடல்நலத்தை பெரும் ஆபத்துக்கு உட்படுத்தலாம் யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பல நாடுகளில் வெப்ப அலை நிலைமைகள் வலுவிழந்து வருவதால், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து யுனிசெஃப் நிறுவனம் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக அதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மே 20 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஐந்து நாள் வெப்ப அலை எச்சரிக்கையின்படி, தில்லி உட்பட இந்தியாவின் பல வட மாநிலங்களில், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு வெப்பநிலை 43-47 ° C ஆக உயர்ந்தது என்பதையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

பாகிஸ்தானில் மே 23 முதல் 27 வரை கடுமையான வெப்ப அலை வீசும் என  அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, பஞ்சாப் அரசு மே 25 முதல் 31 வரை பள்ளிகளை மூடியுள்ளது என்பதையும் அதன் அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்

தெற்காசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை, குழந்தைகள் பாதுகாக்கப்படாவிட்டாலோ அல்லது நீரேற்றம் செய்யப்படாவிட்டாலோ, அது அவர்களில் இலட்சக் கணக்கானோரின் உடல்நலத்தை பெரும் ஆபத்துக்கு உட்படுத்தலாம் என்றும் அவ்வறிக்கையில் எச்சரித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

குழந்தைகளைப் பொறுத்தளவில் அவர்களின் உடலில் இருந்து அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்ற முடியாது ஆதலால், இது நீரிழப்பு, அதிகரித்த உடல் வெப்பநிலை, விரைவான இதயத் துடிப்பு, பிடிப்புகள், கடுமையான தலைவலி, குழப்பம், மயக்கம் மற்றும் கோமாவிற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் நீரிழப்பு, வெப்ப பக்கவாதம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2024, 14:53