ҽ

சிறு சிறு முகாம்களில் வாழும் காங்கோ குடியரசு மக்கள் சிறு சிறு முகாம்களில் வாழும் காங்கோ குடியரசு மக்கள்  (ANSA)

காங்கோவில் குடியிருப்புக்களை இழந்த 70 இலட்சம் பேர்

நாட்டிற்குள்ளேயுள்ள புரட்சியாளர்களாலும், ருவாண்டாவிலிருந்து வரும் ஆயுதம் தாங்கிய குழுவாலும் காங்கோ குடியரசில் தாக்குதல்கள் தொடர்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் கவனமெல்லாம் காசா, வெஸ்ட் பேங்க், உக்ரைன், மற்றும் சூடான் நோக்கி இருக்கும்போது, காங்கோ குடியரசிலும் கிளர்ச்சியாளர்களால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காங்கோ குடியரசில் 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புக்களை இழந்துள்ளதாகவும், பலர் இறந்தும் எண்ணற்றோர் காயமடைந்தும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள்ளேயுள்ள புரட்சியாளர்களாலும், ருவாண்டாவிலிருந்து வரும் ஆயுதம் தாங்கிய குழுவாலும் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறும் செய்தி நிறுவனங்கள், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் பெண்களும் குழந்தைகளும் எனவும் கூறுகிறது.

அடைக்கலம் தேடி முகாம்களில் வாழும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் கருவை சுமக்கும் தாய்மார்களுக்கு போதிய சத்துணவின்மை அதிகரிப்பதாகவும் கூறும் நலப்பணியாளர்கள், இந்நிலை குறித்த உலக நாடுகளின் பாராமுகம் மக்களை மேலும் வாட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் பிறரன்பு அமைப்புகளுக்கு போதிய பாதுகாப்பில்லை என்பதால் உணவு இல்லா நிலையும் அதிகரித்து வருகிறது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2024, 16:43