ҽ

நீர் வடிந்துவரும் நிலையிலும் பாதிப்படைந்த சிறார் நீர் வடிந்துவரும் நிலையிலும் பாதிப்படைந்த சிறார்  (AFP or licensors)

வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானில் பெருமழை பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் அண்மை பெருமழையால் குறைந்தபட்சம் முன்னூறு பேர் இறந்துள்ளனர், பல வீடுகளும் பயிர் நிலங்களும் சேதமாகியுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெருமழையால் பாதிப்புக்களை அனுபவித்துவரும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு இடர்துடைப்புக் குழுக்களை அனுப்பி உதவிவருகின்றன பல உதவி அமைப்புக்கள்.

அண்மை பெருமழையால் குறைந்தபட்சம் முன்னூறு பேர் இறந்தும், பல வீடுகளும் பயிர் நிலங்களும் சேதமாகியுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை ஆற்றவேண்டிய கடமையை உணர்ந்து, குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பு UNICEF,  உலக நலவாழ்வு அமைப்பான WHO மற்றும் Save the Children அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்கள் தங்கள் உதவிகளை ஆற்ற முன்வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என ஐ.நா. நிறுவனத்தையும், ஏனைய உதவி அமைப்புக்களையும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார அமைச்சர் Din Mohammad Hanif அவர்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, உதவிகளை வழங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளான கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கான் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டிய தேவையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளன.

பன்னாட்டு உதவி அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவிகளை வழங்குவதோடு, தேவைப்படும் உதவிகள் குறித்து கணக்கெடுத்தும் வருகின்றன.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2024, 14:26