ҽ

காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்   (AFP or licensors)

காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி சாட்சியம்

காசாவில் தொடரும் போரால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் 200 நாட்களாக நீடித்து வரும் மோதலால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும், போரின் கொடூரத்தால் அவர்களின் வாழ்க்கையே மாறிபோயுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஏப்ரல் 17, இப்புதனன்று இத்தகவலை வழங்கியுள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம், 14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தையின் திகிலுறச்செய்யும் நேரடி சாட்சியம் அடங்கிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தை காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸில் வசிக்கிறார். தற்போது ஜோர்டான் அரசால் அமைக்கப்பட்டுள்ள கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கொடூரமான இரவுநேர வெளியேற்றத்தின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட திகிலுறச்செய்யும் அனுபவத்தை இந்தக் காணொளிக்காட்சியில் விவரிக்கிறார். அதில் தனது தந்தை கொல்லப்பட்டது மற்றும்  தனது இரண்டு சகோதரர்கள் காயமடைந்தது குறித்தும், தான் மருத்துவமனையை அடைந்தது குறித்தும் கூறியது அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2024, 15:42