ҽ

2025ஆம் ஆண்டுக்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது பெறும் வெற்றியாளர்கள் 2025ஆம் ஆண்டுக்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது பெறும் வெற்றியாளர்கள்  (@VaticanNews)

2025 ஆம் ஆண்டுக்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது

World Central Kitchen எனப்படும் அரசு சாரா அமைப்பு, கரீபீயன் நாட்டில் உள்ள Barbados பிரதமர் Mia Mottley, எத்தியோப்பியா – அமெரிக்காவைச் சார்ந்த 15 வயது நிரம்பிய Heman Bekele ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டிற்கான சையத் விருது வழங்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திகான்

2025ஆம் ஆண்டுக்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது பெறும் வெற்றியாளர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடன்பிறந்த உணர்வு நிலை குறித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஏடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் Al-Azhar தலைமைக் குருவுக்கும் இடையே 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, தற்போது அதன் ஆறாவது ஆண்டாக சனவரி 31 வியாழனன்று அபுதாபியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

World Central Kitchen எனப்படும் அரசு சாரா அமைப்பு, கரீபீயன் நாட்டின் Barbados பிரதமர் Mia Mottley, எத்தியோப்பியா – அமெரிக்காவைச் சார்ந்த 15 வயது நிரம்பிய Heman Bekele ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டிற்கான சையத் விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு மனித உடன்பிறந்த நிலை நாளை முன்னிட்டு பிப்ரவரி 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அபுதாபியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

World Central Kitchen எனப்படும் அரசு சாரா அமைப்பானது ஹெய்ட்டியில் உருவானது, 2024 ஆம் ஆண்டில், 20 நாடுகளில் மோதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதாவது WCKஅமைப்பானது 10 கோடியே 90 இலட்சத்திற்கும் அதிகமான உணவுகளை வழங்கியது.

மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவி வழங்குவதில் சிறப்பு பெற்ற World Central Kitchen என்னும் அமைப்பானது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஏறக்குறைய 30 நாடுகளில் 3 கோடிக்கும் அதிகமான உணவுகளை வழங்கியுள்ளது, இதில் 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரயேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்ததிலிருந்து காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு வழங்கிய 1 கோடி உணவுகளும் இதில் அடங்கும்.

பார்படாஸின் பிரதமராக காலநிலை மாற்றத்தில் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைக்காக கௌரவிக்கப்படுபவர் மியா மோட்லி, 2022 ஆம் ஆண்டில், அவர் பிரிட்ஜ் டவுன் முன்முயற்சியைத் தொடங்கினார், இது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்த கவலைகளின் வெளிச்சத்தில் "பன்னாட்டு நிதிக் கட்டமைப்பை சீர்திருத்த அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கான அழைப்பாகவும் இருந்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைவதற்கான உறுதியை அளித்தது.

15 வயதுடைய எத்தியோப்பிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஹேமன் பெக்கலின் தோல் புற்றுநோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் விலை குறைவான சோப்பை உருவாக்கியுள்ளார். இந்த தயாரிப்பு தற்போது அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது நலவாழ்வுப் பள்ளியில் சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 பிப்ரவரி 2025, 12:27