ҽ

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்  

போர்களும் இயற்கைப் பேரழிவுகளும் ஆப்பிரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன!

சஹேலுக்கான (Sahel) இரண்டாம் ஜான் பால் நிறுவனம், செனிகல் நாட்டின் தலைநகர் டக்காரில் கூடி, வத்திக்கான் தலைமை அலுவலகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்படுத்திய அண்மைய சீர்திருத்தத்தின் பின்னணியில் சிக்கலான ஆப்பிரிக்க பகுதியில் அதன் தற்போதைய வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி விவாதித்து வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 17 முதல் 21 வரை செனிகல் நாட்டின் தலைநகர் டக்காரில் (Dakar) இடம்பெற்றுவரும் சஹேலுக்கான (Sahel) இரண்டாம் ஜான் பால் நிறுவனத்தின் 43-வது இயக்குநர்கள் குழு கூட்டத்தில், “போர்களும் இயற்கைப் பேரழிவுகளும் ஆப்பிரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன” என்று திருப்பீடம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இது மதங்களுக்கு இடையிலான உரையாடலையும் ஊக்குவிக்கிறது.

இந்த அமர்வில், ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற சவால்களுக்கு மத்தியில் சஹேலில் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஆதரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இக்கூட்டத்தில் உரையாற்றிய பேரருள்திரு Roberto Campisi மற்றும், அருள்சகோதரி Alessandra Smerilli இருவரும் சஹேலில் நீதி, ஒன்றிப்பு மற்றும் பொது நலனை மேம்படுத்துவதில் இந்நிறுவனத்தின் பங்கை வலுப்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2025, 13:08