ҽ

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்சகோதரி Raffaella Petrini (கோப்புப்படம்) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்சகோதரி Raffaella Petrini (கோப்புப்படம்) 

வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி Raffaella Petrini

வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி Raffaella Petrini அவர்கள், வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்றிலேயே முதன்முறையாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்கள், வருகின்ற மார்ச் 1, சனிக்கிழமை முதல் வத்திக்கான் நகர நிர்வாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கின்றார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வத்திக்கான் நகர மாநிலத்திற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நகர நிர்வாகத்துறையின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ள Raffaella Petrini அவர்கள், வத்திக்கான் நிர்வாகப் பதவியை வகிக்கும் முதல் அருள்சகோதரி என்ற பெருமைக்குரியவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில், அர்ப்பண வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக  அருள்சகோதரி Simona Brambilla அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி Raffaella Petrini அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்றிலேயே முதன்முறையாகும்.

மேலும் கடந்த ஆண்டுகளில், Francesca di Giovanni , Nathalie Becquart, Alessandra Smerilli என்னும் அருள்சகோதரிகளும், Barbara Jatta, Nataša Govekar, Cristiane Murray ஆகிய பெண் பொது நிலையினரும் திருஅவையைச் சார்ந்த பல்வேறு பொறுப்புகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 பிப்ரவரி 2025, 14:33