ҽ

São Tome e Principe  தலத்திருஅவை São Tome e Principe தலத்திருஅவை 

வத்திக்கான், சாவ் தோம் மற்றும் பிரின்சிப்பே இடையே ஒப்பந்தம்

ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தை மதிப்பதுடன், தனி நபரின் ஆன்மீக, பொருளாதார நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் ஒன்றிணைந்து உழைத்தல் அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வத்திக்கானுக்கும் மத்திய ஆப்பிரிக்காவின் சாவ் தோம் மற்றும் பிரின்சிப்பே நாட்டிற்கும் இடையே அரசியல் உறவில் புது விதிகள் அடங்கிய ஒப்பந்தம் திங்களன்று இரு நாடுகளிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வத்திக்கானில் இடம்பெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில், நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், சாவ் தோம் மற்றும் பிரின்சிப்பே சார்பில் அதன் வெளியுறவு அமைச்சர் Gareth Haddad do Espírito Santo Guadalupe அவர்களும் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டு, இவ்விரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவு குறித்த விதித் தொகுப்பை பரிமாறிக் கொண்டனர்.

இரு தரப்பினரிடையேயும் பரிமாறிக்கொண்ட இந்த விதித்தொகுப்பில் 28 விதிகள் இத்தாலியம் மற்றும் போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்டிருந்தன.

அரசுக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே சட்டபூர்வமான உறவு குறித்து எடுத்துரைக்கும் இந்த ஒப்பந்தம், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அதன் நிறுவனங்களின் சட்ட பூர்வ உரிமையை அங்கீகரிக்கிறது.

இருதரப்பினருக்கும் இடையே நிலவும் நட்புணர்வு, ஒத்துழைப்பு ஆகியவைகள் ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தை மதிப்பதுடன்,  தனி நபரின் ஆன்மீக, பொருளாதார நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் ஒன்றிணைந்து உழைப்பது குறித்தும் எடுத்துரைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 15:13