ҽ

பேராயர்  கபிரியேலே காச்சா. பேராயர் கபிரியேலே காச்சா. 

கதிர்வீச்சு விளைவுகளால் பாதிக்கப்படும் பெண்கள்

கதிர்வீச்சு வெளிப்பாட்டின் தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளை போதுமான அளவில் பாதுகாக்கவில்லை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அணு ஆயுத வெடிப்புகளினால் ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகள், பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகமாகப் பாதிக்கின்றன என்றும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பத்து மடங்கு அதிக அளவில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் கபிரியேலே காச்சா.        

டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை நியுயார்க்கில் நடைபெற்ற மாநிலக் கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பாலின விதிகளை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகியவை குறித்து  பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர்  கபிரியேலே காச்சா.

உலகளவில் பயன்பாட்டில் உள்ள கதிர்வீச்சு வெளிப்பாட்டின் தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்புகள், இன்றுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளை போதுமான அளவில் பாதுகாக்கவில்லை என்றும், அணு ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொடர் தீங்கு விளைவிக்கும் அபாயங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்றும் கூறியுள்ளார் பேராயர் காச்சா.

கருவிலுள்ள குழந்தைகளின் ஆரோக்கியம், கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள், கருச்சிதைவுகள், பிறப்பு குறைபாடுகள் ஆகியவற்றிற்கு அணு கதிர்வீச்சின் பாதிப்புக்கள் காரணமாகின்றன என்றும், இதிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கவும், பெண்கள் நலன் மற்றும் அவர்களது குழந்தைகள் நலனைப் பாதுகாக்கப் போதுமான கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயார் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 10:55