ҽ

விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை 

உடல் தகனம் பற்றி விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை பதில்

இறந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்கு தகனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளார் கர்தினால் ஷூப்பி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறந்தவரின் சாம்பலை என்புக்கலம் போன்ற பொதுவான இடங்களில் வைக்க முடியுமா என்றும், இறந்தவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சாம்பலின் ஒரு சிறிய பகுதியை வைக்க முடியுமா என்றும் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஷூப்பி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை

இறந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தகனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளார் கர்தினால் ஷூப்பி. 

கர்தினால் ஷூப்பி அவர்களால் முன்மொழியப்பட்ட இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திருமுழுக்குப் பெற்றவர்களின் சாம்பலை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு புனிதமான இடத்தை ஏற்பாடு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருபீடத் துறை.

தகனம் செய்யப்பட்ட விசுவாசிகளின் எஞ்சியுள்ளவற்றை அகற்றுவது குறித்து Bologna-வின் பேராயரும் இரண்டு கேள்விகளை விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறைக்குச் சமர்ப்பித்துள்ளார். அதில் இரண்டாவது கேள்விக்கான பதிலில், இறந்த நபருடைய சாம்பலின் ஒரு பகுதியை அவரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியுள்ள இடத்தில் வைக்க குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை திருஅவை அதிகாரிகள் பரிசீலித்து மதிப்பீடு செய்யலாம் என்று அத்துறை தெரிவித்துள்ளது.

இறந்த நபரின் சாம்பல், அந்த நபரின் வரலாற்று பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த பொருள் எஞ்சியுள்ளவற்றிலிருந்து வருகிறது என்றும், இது புனிதர்களின் நினைவுச்சின்னங்கள் குறித்த திருஅவையின்  குறிப்பிட்ட அக்கறையையும் பக்தியையும் காட்டுகிறது என்றும் விளக்கமளித்துள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை.

இந்தக் கவனமும் நினைவாற்றலும் இறந்தவரின் சாம்பலைப் புனிதமாக மதிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருப்பதற்கு நம்மை இட்டுச் செல்கிறது என்றும், அதை நாம் இறைவேண்டலுக்கு ஏற்ற புனிதமான இடத்தில் பாதுகாக்கிறோம் என்றும் மேலும் விளக்கமளித்துள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கானத் திருப்பீடத்துறை.

மேற்கண்ட கேள்விகளுக்கான விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை பதிலின் முழு உரையையும் வத்திக்கான் இணையதளத்தில் (Vatican website) காணலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2023, 16:01