ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்து உழைப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 வரை இத்தாலியில் சிறப்பிக்கப்படும், மருந்துக்கள் சேகரிக்கும் தினங்களைக் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துக்களை வாங்கி மருத்துவ வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம் நாம் ஏழ்மையில் வாடும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவிகள் பெற உதவுகிறோம் என கூறியுள்ளார்.
நாம் மருந்துக்களை வாங்கி மருத்துவ வங்கிகளுக்கு இலவசமாக வழங்குவதன் வழியாக, அந்த வங்கிகள் மருத்துவ உதவிகள் தேவைப்படும் ஏழைமக்களுக்கு உதவ முடியும் என பிப்ரவரி 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அவர் இதே நாளில் வெளியிட்டுள்ள பிறிதொரு டுவிட்டர் செய்தியில், நாம் ஒவ்வொருவரையும் ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நடத்தி, ஒன்றிணைந்து வருங்காலத்திற்காக உழைப்போம் எனக்கூறியுள்ளதுடன், உண்மையான செல்வம் என்பது மக்களிலும் அவர்களுடன் நாம் கொள்ளும் உறவிலும் காணக்கிடக்கிறது என கூறியுள்ளார்.
திருத்தந்தை வெளியிட்டுள்ள மூன்றாவது டுவிட்டர் குறுஞ்செய்தியில், பிப்ரவரி மாத செபக்கருத்தைக் குறிப்பிட்டு, தேவ அழைத்தலுக்கு செவிமடுக்கும் இளையோரை திருஅவை சமூகம் வரவேற்க முன்வருமாறு செபிப்போம் என அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்