ҽ

உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனை உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனை  (ANSA)

திருத்தந்தைக்கு தீவிர நுரையீரல் அழற்சி நோய்!

பிப்ரவரி 18, இச்செவ்வாய்க்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தீவிர நுரையீரல் அழற்சி நோய் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 19, புதன்கிழமை இன்று காலை, திருத்தந்தை நேற்றைய இரவை நன்றாகக் கழித்தார் என்றும், இன்று காலை நல்ல உடல்நிலையுடன் விழித்தெழுந்து காலை உணவை உட்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தீவிர நுரையீரல் அழற்சி நோய் என்றபோதிலும், அவரது நிலைமை சீராக இருப்பதாக பிப்ரவரி 18, இச்செவ்வாய்க்கிழமை மாலை அவரின் தற்போதைய மருத்துவ நிலை குறித்துத் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

பிப்ரவரி 14, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆய்வக சோதனைகள், நுரையீரல்  ஊடுகதிர்கள் சோதனை (chest X-rays) மற்றும் மருத்துவ நிலை (clinical condition) யாவும் ஒரு சிக்கலான செயல்முறையைத் (complex picture) தொடர்ந்து முன்வைக்கின்றன என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

"மூச்சுக்குழல் அழற்சி மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழல் அழற்சியின் பின்னணியில் எழுந்த பாலிமைக்ரோபியல் தொற்றுக்கு (polymicrobial infection) சிகிச்சை வழங்க, மேலும் கார்டிகோஸ்டீராய்டு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு (corticosteroid and antibiotics) தேவைப்படுகிறது என்பதால், இது நலப்படுத்தும்  சிகிச்சையை (therapeutic treatment)  மிகவும் சிக்கலாக்குகிறது என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் மருத்துவக் குழு மற்றும் அகுஸ்தீனோ ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவ வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட மார்பு CT ஸ்கேன் தீவிர நுரையீரல் அழற்சி நோய்க்கான தொடக்க நிலையை வெளிப்படுத்தியது என்றும், இதன் காரணமாக கூடுதல் மருந்தியல் சிகிச்சை அவருக்குத் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

திருத்தந்தை திருநற்கருணையை உட்கொண்டார் என்றும், நாள் முழுவதும் ஓய்வு, இறைவேண்டல் மற்றும் நூல் வாசிப்பில் ஈடுபட்டார் என்றும் உரைக்கும் அந்த அறிக்கை, இவ்வேளையில், திருத்தந்தை தன்மீது மிகுந்த அக்கறைகொண்டுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், தொடர்ந்து தனக்காக இறைவேண்டல் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார் என்று மேலும் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2025, 11:56