ҽ

புனித ஜோசப்பின் பகிதா புனித ஜோசப்பின் பகிதா 

எதிர்நோக்கின் தூதுவராக மாற வலியுறுத்தும் புனித பகிதாவின் வரலாறு

மனித கடத்தலுக்கு பலியான புனித ஜோசப்பின் பக்கிதாவின் வாழ்க்கை வரலாறானது, தேவையில் உள்ளவர்களுக்கு எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுவது எப்படி என்பதை நமக்குக் காட்டுகிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனித கடத்தலுக்கு ஆளான புனித ஜோசப்பின் பகிதா அவர்களின் வாழ்க்கை வரலாறானது, இறைவனின் அருளால் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறவும், தேவையில் இருப்பவர்களுக்கு  எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது என்று குறுஞ்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 8, சனிக்கிழமை திருஅவையில் நினைவுகூரப்படும் புனித ஜோசப்பின் பகித்தாவின் திருவிழாவையொட்டி சிறப்பிக்கப்படும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் செப நாள் குறித்து இரண்டு குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹேஸ்டாக் மனிதகடத்தலுக்கு எதிராக செபிப்போம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இரண்டு குறுஞ்செய்திகளில் முதலாவதில் புனித ஜோசப்பின் பகிதா அவர்கள் பற்றியும் இரண்டாவதில் மனித கடத்தலுக்கு ஆளான மக்களுக்காக செபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித கடத்தலுக்கு பலியான புனித ஜோசப்பின் பக்கிதாவின் வாழ்க்கை வரலாறானது, இறைவனின் அருளால் அடிமை விலங்குகளை உடைத்து, மீண்டும் விடுதலை பெறவும், தேவையில் உள்ள மற்றவர்களுக்கு எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுவது எப்படி என்பதையும் நமக்குக் காட்டுகிறது என்பதே திருத்தந்தையின் முதல் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

மனித கடத்தலுக்கு ஆளான மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்தக் காலில் சுயமாக தனித்து நிற்கவும், அவர்களைப் போல பாதிக்கப்பட்டப் பிறரை மீட்கவும், தடுப்பு வழிகளை மேற்கொள்ளவும், அருகிருப்பு, இரக்கம் போன்றவற்றை வெளிப்படுத்துவோம் என்பதே திருத்தந்தையின் இரண்டாவது குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2025, 16:37