ҽ

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படை எதிர்நோக்கு

தூய ஆவியார் ஆற்றல் மிக்க பெரிய செயல்களைச் செய்ய நம்மை உந்தித் தள்ளுகின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது எதிர்நோக்கானது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நற்செய்தி வரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான சிறந்த எதிர்காலத்திற்கான கதையை எழுத உதவும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 1 சனிக்கிழமை ஹேஸ்டாக் அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் என்ற தலைப்பில் குறுஞ்செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் ஆற்றல் மிக்க பெரிய செயல்களைச் செய்ய நம்மை உந்தித் தள்ளுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை 29ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாளை முன்னிட்டு குறுஞ்செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்பதன் அடிப்படையில் அமைந்த நமது எதிர்நோக்கானது அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கு எதிர்காலத்தில் சிறந்த கதையை எழுதத் தூண்டும் என்றும், தூய ஆவியாரின் ஆற்றல் அளப்பரிய பெரிய காரியங்களை செய்ய நம்மை தூண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 பிப்ரவரி 2025, 14:29