ҽ

தூய பேதுரு பெருங்கோவிலில் ஆயர்கள் (கோப்புப்படம்) தூய பேதுரு பெருங்கோவிலில் ஆயர்கள் (கோப்புப்படம்)  (Vatican Media)

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

தென்னிந்தியாவின் Neyyattinkara மறைமாவட்ட இணை உதவி ஆயராக அருள்பணி. Selvarajan Dasan அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர உயர் மறைமாவட்டத்திற்கு பேராயராக Warangal மறைமாவட்ட ஆயர்  Udumala Bala Showreddy அவர்களை நியமித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட இந்தியாவின் Jalpaiguri  மறைமாவட்ட ஆயராக அருள்பணி. Fabian Toppo அவர்களையும், Shillong பெருநகர உயர்மறைமாவட்ட துணைஆயராக அருள்பணி. Bernard Laloo அவர்களையும், தென்னிந்தியாவின் Neyyattinkara மறைமாவட்ட இணை உதவி ஆயராக அருள்பணி. Selvarajan Dasan அவர்களையும், நியமித்துள்ளார்.  

ஆயர்  Udumala Bala Showreddy

ஆயர்  Udumala Bala Showreddy அவர்கள் 1954-ஆம் ஆண்டு ஜூன் 18, அன்று குடூரில் பிறந்தார். 1979-ஆம் ஆண்டு வாரங்கல் மறைமாவட்ட அருள்பணியாளராகக் குருத்துவ அருள்பொழிவு பெற்றார். 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 13, அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு மே மாதம் 23, அன்று திருநிலைப்படுத்தப்பட்டார். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 9, வரை Khammam மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக பணியாற்றியவர்.

Jalpaiguri மறைமாவட்ட ஆயர் Fabian Toppo

வடஇந்தியாவின் Jalpaiguri மறைமாவட்ட ஆயராக Fabian Toppo அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் Fabian Toppo அவர்கள், சத்தீஸ்கரில் உள்ள ஜாஸ்பூர் மறைமாவட்டத்தில் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று பிறந்தவர், புனேயில் உள்ள திருப்பீடக் குருத்துவக் கல்லூரியில் தத்துவஇயலையும் உரோம் உர்பானியம் திருப்பீடக் குருத்துவக் கல்லூரியில் இறையியலையும் பயின்றவர். 1994ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று Jalpaiguri மறைமாவட்ட குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டு, 2016-ஆம் ஆண்டு முதல் கல்கத்தாவில் உள்ள Morning Star Regional Seminary and College இல் விவிலிய இறையியல் பேராசிரியராகவும், தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.

Shillong பெருநகர உயர்மறைமாவட்ட துணைஆயர் Bernard Laloo

Shillong பெருநகர உயர்மறைமாவட்ட துணைஆயராக அருள்பணி. Bernard Laloo அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1976-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று பிறந்த ஆயர் Bernard Laloo அவர்கள், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று அம்மறைமாவட்ட குருவாக அருள்பொழிவு பெற்றார். 2022ஆம் ஆண்டு முதல் ஷிலாங்க் பெருநகர உயர்மறைமாவட்ட அதிபராகவும்  அன்னை மரியா ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகின்றார்

Neyyattinkara மறைமாவட்ட இணை உதவி ஆயர் Selvarajan Dasan

தென் இந்தியாவின் Neyyattinkara மறைமாவட்ட இணை உதவி ஆயராக அருள்பணி. Selvarajan Dasan அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை. 1962-ஆம் ஆண்டு ஜனவரி 27, அன்று பிறந்த ஆயர் Selvarajan Dasan அவர்கள், 1987ஆம் ஆண்டு டிசம்பர் 23, அன்று குருவாக அருள்பொழிவு பெற்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2025, 13:57