ҽ

ஜெர்மனியின் Auschwitz வதை முகாம் ஜெர்மனியின் Auschwitz வதை முகாம் 

வன்முறையின் வேர்களை அகற்றாமல் உடன்பிறந்த உறவு இல்லை

பெரும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தையும் கண்ணீரையும் நினைவில் கொண்டு இனப்படுகொலை, வன்முறை மீண்டும் ஒருபோதும் மனித உள்ளத்தில் எழ வேண்டாம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இலட்சக்கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்பட்ட நினைவு நாளை மறக்கவோ மறுக்கவோ கூடாது என்றும், இனப்படுகொலைக்கான பயங்கரத்தை தூண்டிய வெறுப்பு மற்றும் வன்முறையின் வேர்களை முதலில் அகற்றாமல் எந்த உடன்பிறந்த உறவும் இருக்க முடியாது என்றும் தனது குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 திங்கள்கிழமை Holocaust  பெரும் இன அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு  இரண்டு குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதர்களுக்கு எதிரான கொடுமையை ஒழிக்கவும், அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுத்து நிறுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்  

இன விரோதத்தின் விதைகள் மீண்டும் ஒருபோதும் மனித இதயத்தில் வேரூன்ற அனுமதிக்கப்படக்கூடாது என்பதை இன்று உறுதியாக வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், பெரும் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தையும் கண்ணீரையும் நினைவில் கொண்டு இனப்படுகொலை, வன்முறை மீண்டும் ஒருபோதும் மனித உள்ளத்தில் எழ வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1933- ஆம் ஆண்டு முதல் 1945- ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எண்ணற்ற பிற சிறுபான்மையின உறுப்பினர்கள், 60 இலட்சம் யூதர்கள், ஜெர்மனியின் நாசிச ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜனவரி 2025, 12:01