ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

பிறருக்கான சேவை என்பது இறையன்பின் பிரதிபலிப்பு

நம் ஒவ்வொரு கவனிப்பு மற்றும் அக்கறையின் செயல்பாடும், மென்மையான கரிசனையின் வெளிப்பாடும், கருணையின் நடவடிக்கையும் இறையன்பின் பிரதிபலிப்பே.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நாம் பிறருக்கு சேவை செய்ய முன்வரும்போது, நம் ஒவ்வொரு செயலும் கடவுளன்பின் பிரதிபலிப்பாக இருக்கும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளன்பின் பிரதிபலிப்பாக நாம் அனைவரும் மற்றவர்களுக்கு சேவைச் செய்ய முன்வரவேண்டும் என்பதை மையமாக வைத்து நவம்பர் 12, செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறருக்கு நாம் பணிபுரிய கற்றுக்கொள்ளும்போது, நம் ஒவ்வொரு கவனிப்பு மற்றும் அக்கறையின் செயல்பாடும், மென்மையான கரிசனையின் ஒவ்வொரு வெளிப்பாடும், கருணையின் ஒவ்வொரு நடவடிக்கையும் இறையன்பின் பிரதிபலிப்பாக மாறுகிறது என அதில் கூறியுள்ளார்.

இறை இரக்கம் மற்றும் இறையன்பு வழியாக  நாம் பிறருக்குச் சேவை புரிய வேண்டும் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் எனவும், இறையன்பு என்பது பிறரன்பின் வழியாகத்தான் செயலாற்ற முடியும் எனவும், மனித சமுதாயத்திற்குச் சேவை புரிவதில் மனிதர் தம்மையே ஈடுபடுத்தும்பொழுது அவர்கள்  இறைப்பணியை எடுத்துச் செல்கின்றனர் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தின் ஆங்கிலப்பிரிவில் மட்டும் இன்றுவரை 5,707 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இக்குறுஞ்செய்திகளை இதுவரை 1 கோடியே 84 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2024, 15:16