கிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதையில் நம்மை இணைக்கும் இரத்த தானம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இரத்த தானத்தை மனித தாராள மனப்பான்மையின் செயலாக மட்டுமல்லாமல், கிறிஸ்துவில் நம்மை ஒன்றிணைக்கும் ծ்றுமையின் பாதையில் ஆன்மிக வளர்ச்சியின் பயணமாகவும் கருத வேண்டும் என்றும், துன்புறும் மக்களில் தன்னை அடையாளப்படுத்தும் இறைஇரக்க ஆண்டவருக்கு அளிக்கும் பரிசாகக் கருத வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 9 சனிக்கிழமை வத்திக்கானின் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இரத்த தானம் செய்வோர் இத்தாலிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஏறக்குறைய 3,700 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், FIDAS என அழைக்கப்படும் அச்சங்கத்தின் 65ஆவது ஆண்டை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகிழ்ச்சி சான்றுவாழ்வு, ծ்றுமை என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிழ்ச்சி
மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மற்றவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பவர்களிடம் அடிக்கடி காணப்படும் பண்புகள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இப்பண்பு தற்செயலானதல்ல அது உங்கள் அனைவரிடமும் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
அன்புடன் கொடுப்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தருகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்ற விவிலிய வரிகளையும் மேற்கோள்காட்டினார்.
பரிசு மகிழ்ச்சியைத் தருகிறது, நமது முழு வாழ்க்கையும் மாறுகிறது மற்றும் செழித்து, நற்செய்தியின் ஒளிரும் இயக்கவியலுக்குள் நுழைகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இரத்த தானத்தின் வழியாக கொடுப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை அறிகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
சான்று வாழ்வு
சுயநலத்தால் மாசுபட்ட உலகில் நாம் சந்திக்கின்ற சகோதரனை விட எதிர்கொள்ளவேண்டிய எதிரியே அதிகம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நமது அலட்சியம், தனிமை, எல்லைகள், தடைகளைத் தகர்த்து சான்றுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரத்ததான பெறுபவர், வழங்குபவர் இருவருக்கும் யார் பயனாளி பலனாளி என்பது தெரியாது, தோலின் நிறம், பெறுபவர் கொடுப்பவரின் இன அல்லது மத உறவைப் பார்க்காது, தாழ்மையுடன் தன்னால் முடிந்த இடத்தில் நுழைந்து உடலுக்கு பலன் கொடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ծ்றுமை
இரத்த தானத்தை மனித தாராள மனப்பான்மையின் செயலாக மட்டுமல்லாமல், கிறிஸ்துவில் ஐக்கியப்படுத்தும் ծ்றுமையின் பாதையில் ஆன்மீக வளர்ச்சியின் பயணமாகவும், துன்புறும் மக்களில் தன்னை அடையாளப்படுத்தும் இறை இரக்கத்தின் ஆண்டவருக்கான பரிசாகவும் அதைக் கருதவேண்டும் என்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்