ҽ

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

செபத்தில், இறைவார்த்தையை வரவேற்பதில் நம்மை நிலைநிறுத்துவோம்

செபத்தில் நம்மை நாம் நிலைநிறுத்துவோம், கடவுளுடைய வாரத்தையை நம்மில் வரவேற்போம், காயம்பட்ட சகோதர சகோதரிகளுக்கு முன் நல்ல சமாரியன் போன்று நம்மை நாம் நிலைநிறுத்துவோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தவக்காலத்தில், செபத்தில் நிலைத்து நிற்கவும், இறைவார்த்தையை நம்மில் வரவேற்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், திருவிவிலியத்தில் குறிப்பிடப்படும் நல்ல சமாரியன் போல வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 4 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களை ஹேஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயம்பட்ட உடன்வாழும் நம் சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தவக்காலத்தில், செபத்தில் நம்மை நிலை நிறுத்துவோம், கடவுளுடைய வாரத்தையை நம்மில் வரவேற்பத்தில், காயம்பட்ட சகோதர சகோதரிகளுக்கு முன் நல்ல சமாரியன் போன்று நம்மை நாம் நிலைநிறுத்துவோம் என்றும், கடவுளன்பு, சகோதர அன்பு என்னும் ஒரே அன்பில் வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2024, 13:38