ҽ

2023 தாத்தா பாட்டிகள் தினத்தின்போது திருத்தந்தை 2023 தாத்தா பாட்டிகள் தினத்தின்போது திருத்தந்தை 

தாத்தா பாட்டி, பேரக்குழந்தைகளுக்கு வழங்கும் ஞானம், பாரம்பரியம்

4ஆவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கு, “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்”(தி.பா. 71:9) என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட உள்ள 4ஆவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கு, “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்”(தி.பா. 71:9) என்ற திருப்பாடல் வரிகளை தலைப்பாக எடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் தாத்தா பாட்டிகளான சுவக்கீன் மற்றும் அன்னாவின் திருவிழாவிற்கு அருகில் வரும் வகையில் ஜூலை மாதத்தின் 4ஆம் ஞாயிறன்று ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்பட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம் இவ்வாண்டு, தனிமை என்பதை தன் மையப்பொருளாகக் கொண்டுள்ளது.

தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு, அதாவது வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்கும் ஞானம் மற்றும் உயர் பாரம்பரியம் குறித்து ஆழ்ந்து சிந்திக்க, திருஅவையால் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

 “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்” (தி.பா. 71:9) என திருத்தந்தையால் இவ்வாண்டிற்கென எடுக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Kevin Farrell அவர்கள், தனிமை குறித்த இன்றைய உண்மை நிலைகளை மனதில்கொண்டு, குடும்பங்களும் திருஅவை சமூகங்களும் கலந்துரையாடலின் கலாச்சாரத்தையும், பகிர்வதற்கானவும் செவிமடுப்பதற்கானவும் இடத்தையும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தையின் தலைப்பு வலியுறுத்தி நிற்கின்றது என்றார்.

மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு நிலையாக இருக்கும் தனிமை என்பது ஆறுதலை நாடி நாம் இறைத்தந்தையை நோக்கிச் செல்ல அழைப்புவிடுக்கிறது என உரைத்தார் கர்தினால் Farrell .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2024, 14:54