ҽ

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமயக் கூட்டத்தில் திருத்தந்தை (கோப்புப்படம் மங்கோலியா செப். 3. 2023) கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமயக் கூட்டத்தில் திருத்தந்தை (கோப்புப்படம் மங்கோலியா செப். 3. 2023)  (AFP or licensors)

பல்சமய உரையாடலுக்கான பாதை அமைதியின் பாதை

படைப்பு அனைத்தையும் உருவாக்கிய இறைவனைப் புகழவும், போற்றவும், அவசரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பணியினை மனிதகுலத்திற்கு செய்யவும் பல்சமய உரையாடல் உதவுகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல்சமய உரையாடலுக்கான பாதை என்பது அமைதியின் பாதை மற்றும் அமைதிக்கான பாதை என்றும், 2025ஆம் ஆண்டிற்கான யூபிலி தயாரிப்பிற்காக செப ஆண்டில் இருக்கும் நாம் திருப்பலி மற்றும் செபங்களில் பங்கேற்று, திருஅவையின் மறைப்பணிக்காக செபிக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 3 சனிக்கிழமை ஹேஸ்டாக் உலக மத நல்லிணக்க வாரம் (#wihw2024) மற்றும் செப ஆண்டு (#yearofprayer) என்ற தலைப்புக்களில் வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் குறுஞ்செய்திகளில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்சமய உரையாடலுக்கான பாதை என்பது அமைதியின் பாதை, அமைதிக்கான பாதை, என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், படைப்பு அனைத்தையும் உருவாக்கிய இறைவனைப் புகழவும் போற்றவும், அவசரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பணியினை மனிதகுலத்திற்கு செய்யவும் பல்சமய உரையாடல் உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2025 ஆண்டு யூபிலி தயாரிப்பிற்காக செபஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாம் அனைவரும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணியினைத் தீவிரமாக்க திருப்பலி மற்றும் செபங்களில் நமது ஈடுபாட்டை அதிகரிக்க அழைப்புவிடுப்பதாகவும் அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 15:12