ҽ

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை 

நம்மை மீண்டும் தூக்கிவிடும் ஒப்புரவு அருளடையாளம்

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு அருடையாளம் என்பது உயிர்ப்பின் அருளடையாளம், ஏனெனில், அது தூய்மையான, கலப்பற்ற கருணையாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒப்புரவு அருளடையாளம் நம்மை மீண்டும் தூக்கிவிடுவதாக உள்ளது, ஏனெனில், அது உயிர்ப்பின் அருளடையாளம் என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திருநீற்றுப் புதனுடன் துவங்கியுள்ள கிறிஸ்து உயிர்ப்பிற்கான தயாரிப்புக் காலத்தில், தவக்காலம் என்ற ஹேஷ்டாக்குடன் ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளம் நம்மை மீண்டும் தூக்கி நிறுத்தும் அருளடையாளமாகும் என தன் பிப்ரவரி 16, வெள்ளிக்கிழமை டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தரையில் நாம் விழுவதனால் நாம் அழுதுகொண்டேயிருக்கும் வகையில் நாம் அங்கேயே விட்டுவிடப்படுவதில்லை, ஒப்புரவு அருடையாளம் என்பது உயிர்ப்பின் அருளடையாளம், ஏனெனில், அது தூய்மையான, கலப்பற்ற கருணையாகும் என அதில் மேலும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மேலும், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், இரக்கத்தின் இனிமையை அறிவிப்பவர்களாகச் செயல்படவேண்டும் என  அந்த டுவிட்டர் குறுஞ்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025ஆம் ஜூபிலி ஆண்டிற்கு தயாரிப்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய இறைவேண்டுதல் ஆண்டு குறித்தும், தற்போது இடம்பெற்றுவரும் தவக்காலம் குறித்தும் இந்நாட்களில் டுவிட்டர் குறுஞ்செய்திகளை வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2024, 15:01