ҽ

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

எதார்த்தத்திற்கு நம் கண்களைத் திறப்போம் – திருத்தந்தை

ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் அழுகைக் குரலானது விண்ணகத்தை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நாம் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கின்றோமா? அக்குரல்கள் நம் மனதை உலுக்குகின்றனவா? அசைக்கின்றனவா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது தவக்காலம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றால் எதார்த்தத்திற்கு நாம் நம் கண்களைத் திறக்க வேண்டும் என்றும், நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளின் அழுகைக்கு நாம் செவிசாய்க்கின்றோமா என சிந்திக்க வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 24 சனிக்கிழமை ஹேஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் அழுகைக் குரலானது விண்ணகத்திற்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

இயேசுவின் அன்பை, அவர் நமக்காகப் பட்டபாடுகளை நினைவுகூரும் இத்தவக்காலத்தில் எதார்த்தத்திற்கு நாம் நம் கண்களைத் திறக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் அழுகைக் குரலானது விண்ணகத்தை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நாம் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கின்றோமா? அக்குரல்கள் நம் மனதை உலுக்குகின்றனவா? அசைக்கின்றனவா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை துவக்கிய தனது தியானத்தை, பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லேசான காய்ச்சல் காரணமாக தனது பிப்ரவரி 24 சனிக்கிழமை சந்திப்புக்களைத் தவிர்த்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:44