ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

மானுடவியல் ஒன்றே முதன்மையான பணி

பிப்ரவரி 12 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் திருப்பீட வாழ்வுக்கழகத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 70 பேரை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனிதனின் தனித்துவம் என்ன என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி மிக முக்கியமானதென்றும், பழமையானதும், அதே சமயம் எப்போதும் புதுமையான ஒரு கேள்வி என்றும், மானுடவியல் ஒன்றே முதன்மையான பணி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 12 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் திருப்பீட வாழ்வுக்கழகத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 70 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர் அறிவியல், நலவாழ்வு, குணப்படுத்துதல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் திருப்பீட வாழ்வுக் கழகத்தினர் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காக நன்றியினையும், அவர்களின் 30 ஆண்டுகாலப் பணிக்காகத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.

மானுடவியல் ஒன்றே முதன்மையான பணி என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் வழியாக மனிதனின் குறைக்க முடியாத தனித்தன்மையினை, அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற திறனையும், அதனை வளர்க்கும் கலச்சாரத்தையும் மேம்படுத்தும் சவால் நமக்கு உள்ளது என்றும் கூறினார்.

திருப்பீடவாழ்வுக் கழகத்தார் கலந்துரையாடும் கருத்துக்கள் உண்மையில் சவாலானது என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், நிறைவான உரையாடல் மற்றும் ஒழுங்கு பரிமாற்றம், திட்டமிடப்பட்ட தொடர் விவாதங்கள் என்னும் இரண்டு அணுகுமுறைகள் வழியாகவும் அதனை கொணர விரும்பும் செயல் பாராட்டுக்குரியது என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவம் அர்த்தமுள்ள கூறுகளை எப்போதும் உள்வாங்கி குறிப்பிடத்தக்க அளவில் தன் பங்களிப்புக்களை வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பல தலைமுறைகளைத் தழுவக்கூடிய ஓர் அறிவார்ந்த அணுகுமுறையைக் கோரும், ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான செயல்முறை என்றும் கூறினார்.

திருப்பீட வாழ்வுக்கழகத்தின் பொதுப்பேரவையின் விவாதங்கள் அனைத்தும் வளமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க தனது செபம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2024, 11:26