ҽ

உலக ஆயர்கள் மாமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2023 அக்டோபர்) உலக ஆயர்கள் மாமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2023 அக்டோபர்)  (Vatican Media)

ஒருங்கிணைந்தப் பயணப்பேரவையின் இரண்டாம் கட்ட அமர்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6 புதிய ஆலோசகர்களை உலக ஆயர் பேரவையின் தலைமைச் செயலகத்திற்கு நியமித்துள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒருங்கிணைந்த பயணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 முதல் 27 வரை நடைபெற உள்ள நிலையில் இவ்வமர்வின் தொடக்கமாக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களும் உலக ஆயர் பேரவை உறுப்பினர்களுக்கான தியானம் நடைபெற உள்ளதை திருத்தந்தை உறுதிப்படுத்தியதாக உலக ஆயர் பேரவை தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிப்பு, பங்கேற்பு, செயல்பாடு கொண்ட ஒருங்கிணைந்த திருஅவை என்னும் தலைப்பில் இரண்டாம் கட்ட அமர்வானது தொடங்க உள்ள நிலையில், முதல் கட்ட அமர்வில் வெளியிடப்பட்ட சில கருப்பொருள்களை ஆழமாக ஆராய சில குழுக்களை திருத்தந்தை நிறுவி உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  

நல்லிணக்கத்துடன் செவிசாய்த்தல்,இறைமக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், போன்றவற்றில் உரோம் ஆயர், தனிப்பட்ட ஆயர்கள், மற்றும் ஆயர் பேரவையுடன் இணைந்து உரோம் கூரியா பணியாற்றுகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6 புதிய ஆலோசகர்களை ஆயர் பேரவையின் தலைமைச் செயலகத்திற்கு நியமித்துள்ளார்.

அவர்கள் பின்னவருமாறு

1.   பெல்ஜியத்தின் லெய்ஜி (Liegi) மறைமாவட்ட விகார் பேரருள்திரு Alphonse Borras.

2.   கனடாவின் லாவல் இறையியல் பல்கலைக்கழக பேராசிரியர் Gilles Routhier.

3.   ஆஸ்திரேலியக் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் இறையியல் பேராசிரியர்  Ormond Rush.

4.   பெரு நாட்டின் திருப்பீட இறையியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருள்சகோதரி  Birgit Weiler (M.M.S.)

5.   துறவற சமூகவியல் அமைப்பின் தலைவரான பேராசிரியர் Tricia C. Bruce

6.   Rio de Janeiro கத்தோலிக்க இறையியல் திருப்பீடக் கல்லூரியின் பேராசிரியர் Maria Clara Lucchetti Bingemer

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2024, 11:04