ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

போரில் பலியாகுவோரை போரின் பக்க விளைவுகள் என ஒதுக்கமுடியாது

போர் என்பது ஒரு பெருந்துன்பம் என்பதன்றி வேறு எதுவுமில்லை. இது இவ்வுலகின் அனைத்து மக்களின் மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் ஒரு படுகொலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போரில் பொதுமக்கள் உயிரிழப்பது ஒரு துணைப் பாதிப்பு அல்லது தவிர்க்க முடியாதது என எவரும் ஒதுங்கிவிட முடியாது என ஜனவரி 9ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமைதி என்ற ஹேஷ்டாக்குடன் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், போரினால் பலியாகும் பொதுமக்களை, போரின் பக்க விளைவுகள் என எவரும் ஒதுக்கமுடியாது, ஏனெனில் இவ்வாறு மடிந்த மக்கள் தங்களுக்கென பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட மக்கள், தங்கள் வருங்காலம் பறிக்கப்பட்டு அனாதைகளான குழந்தைகள், மற்றும் பசி, தாகம், குளிர் இவைகளால் துன்புறுபவர்கள், அல்லது ஊனமாக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், மனிதனின் மாண்புக்கு ஊறுவிளைவிப்பதாக போர் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போருக்கு பலியானவர்கள் ஒவ்வொருவரின் கண்களை நம்மால் பார்க்க முடிந்தால், அதிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடிந்தால், நமக்குத் தெரியும், எதற்காக போர் என்பது நடத்தப்படுகின்றது என்று. போர் என்பது ஒரு பெருந்துன்பம் அன்றி வேறு எதுவுமில்லை, இது இவ்வுலகின் அனைத்து மக்களின் மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் ஒரு படுகொலை, என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2024, 14:22