ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

அமைதி என்பது மதச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது

உலகெங்கிலும் துயருறும் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் தங்கள் தாயகமான சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகெங்கிலும் உள்ள 36 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் காரணமாக துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 11, இப்புதனன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கவலைய வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்படித் துயருறும் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் தங்கள் தாயகமான சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்றும், அமைதி என்பது மதச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 36 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் காரணமாக துன்புறுகின்றனர் என்று 2023-ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையில் கூறியுள்ள  Open Doors என்ற அமைப்பு, இது உலகில் உள்ள ஒவ்வொரு ஏழு கிறிஸ்தவர்களில் ஒருவர் தனது மத நம்பிக்கைக்காக அதிக அளவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை அனுபவிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2024, 16:11