ҽ

கிறிஸ்துவின் அரசாட்சி மறைபரப்பு சபையின் அருள்பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை கிறிஸ்துவின் அரசாட்சி மறைபரப்பு சபையின் அருள்பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

உலகுசார் துறவு அமைப்பு என்பது, திருஅவையின் ஒரு பரிமாணமாகும்

ஃபிரான்சிஸ்கன் தனிவரம் உங்களை தாழ்மையுடனும், தயார் நிலையிலும், உடன்பிறந்த உறவோடும் பணியாற்ற உங்களை உருவாக்குகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகுசார் துறவு அமைப்பு என்பது திருஅவையின் ஒரு பரிமாணமாக இருந்தால், பொதுநிலையினர் மற்றும் அருள்பணியாளர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் வாழ்ந்தாலும் அதை வெளிப்படுத்தவும அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 11, இவ்வியாழனன்று, கிறிஸ்துவின் அரசாட்சி மறைபரப்பு சபையின் அருள்பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அருள்பணியாளர்களின் வாழ்விலும் பணியிலும் உலகுசார் துறவற அமைப்பின் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்ட இந்தச் சந்திப்பு எனக்கு வாய்ப்பளித்ததால் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் உரைத்தார்.

உண்மையில்,  உலகுசார் துறவு வாழ்க்கை என்பது, திருஅவையின் ஒரு பரிமாணமாகும் என்றும், இது இவ்வுலகில் இறையாட்சிக்குப் பணியாற்றவும், சான்று பகரவும் அழைக்கப்பட்டது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்தப் பரிமாணத்தை தீவிரமயமாக்க அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்றும் விளக்கினார்.

மறைமாவட்ட அருள்பணியாளர்களாக இருக்கும் நீங்கள், ஆயர் மற்றும் உங்கள் சகோதரர்களுடன் இணைந்த நிலையில் பங்குப்பணிகளில் முழுமையாக ஈடுபட விரும்புகிறீர்கள் என்று கூறிய திருத்தந்தை இதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு உதவுகிறது என்றும், இது  ஃபிரான்சிஸ்கன் தனிவரத்தின்படி  உங்களை தாழ்மையுடனும், தயார் நிலையிலும், உடன்பிறந்த உறவோடும் பணியாற்ற உங்களை  உருவாக்குகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

மேலும் இது கிறிஸ்துவின் அரசாட்சியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுகிறது என்றும், இது ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதையும் தாராளமாகக் கொடுப்பதையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும்  கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவில் அரசத்துவமும் சிறுபான்மையும் ஒன்று என்றும், இதற்குப் புனித பிரான்சிஸ் சான்றாக விளங்குகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2024, 15:19