ҽ

திருத்தந்தையுடன் காசாகிஸ்தான் அரசுத் தலைவர் Kassym-Jomart Tokayev திருத்தந்தையுடன் காசாகிஸ்தான் அரசுத் தலைவர் Kassym-Jomart Tokayev  (Vatican Media)

இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

நாடுகளிடையே நிலவிவரும் நல்லுறவுகள், நாட்டின் முன்னேற்றத்தில் கத்தோலிக்கரின் பங்களிப்பு போன்றவை குறித்து திருப்பீட அதிகாரிகளுடன் அரசுத்தலைவர்கள் உரையாடல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜனவரி 19, வெள்ளிக்கிழமையன்று காசாகிஸ்தான் நாட்டு அரசுத் தலைவர் Kassym-Jomart Tokayev அவர்களும், கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Gustavo Francisco Petro Urrego அவர்களும் திருத்தந்தையை தனித்தனியாக சந்தித்து உரையாடினர்.

திருத்தந்தையை சந்தித்தபின்  நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் Paul Richard Gallagher அவர்களையும் சந்தித்து உரையாடினார் கசாகிஸ்தான் அரசுத் தலைவர்.

காசாகிஸ்தான் அரசுத் தலைவருக்கும் திருப்பீட உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது, இரு தரப்பினருக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றத்தில் கத்தோலிக்கரின் பங்களிப்பு போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டன.

கொலம்பிய அரசுத்தலைவர் Gustavo Francisco Petro Urrego
கொலம்பிய அரசுத்தலைவர் Gustavo Francisco Petro Urrego

திருத்தந்தையை சந்தித்து உரையாடியபின் கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Gustavo Petro அவர்களும், நாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடத்துறைச் செயலர், பேராயர் கல்லகர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெறும் நல்லுறவு, நாட்டில் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல், சமூக நீதி, ஒப்புரவு ஆகியவைகளை ஊக்குவிப்பதில் தலத்திருஅவை ஆற்றிவரும் பணி போன்றவை குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2024, 15:07