ҽ

பாகிஸ்தான் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் பாகிஸ்தான் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில்   (AFP or licensors)

சிறியவராக எளியவராக பூமிக்கு வந்த கடவுள்

சிறியவர்களுடன் சிறியவர்களாக ஏழைகளுடன் ஏழைகளாக நாம் இருக்க வேண்டும் என்பதை கிரிஸ்து பிறப்பு நமக்கு அடையாளப்படுத்துகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் தன்னையே தாழ்த்தி மிகவும் சிறியவராக எளியவராக இப்பூமிக்கு இறங்கி வந்தார் என்பதை கிறிஸ்துமஸ் எடுத்துரைக்கின்றது என்றும், அவரைப் போல நாமும் வாழ அழைப்பு விடுக்கின்றது என்றும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 30 சனிக்கிழமை கிறிஸ்து பிறப்பு எண்கிழமையின் ஐந்தாம் நாளும் 2023 ஆம் ஆண்டின் இறுதி சனிக்கிழமையுமாகிய இன்று ஹேஸ்டாக் கிறிஸ்துமஸ் என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தன்னை மிகவும் தாழ்த்தி, எளியவராக சிறியவராக பூமிக்கு இறங்கி வந்ததை கிறிஸ்து பிறப்பு வெளிப்படுத்துகின்றது. இதன் அடையாளம் நாமும் அவரைப் போல நம்மையே நாம் தாழ்த்திக்கொண்டு பிறருக்கு சேவை செய்ய வேண்டும். சிறியவர்களுடன் சிறியவர்களாக ஏழைகளுடன் ஏழைகளாக நாம் இருக்க வேண்டும் என்பதை கிறிஸ்து பிறப்பு நமக்கு அடையாளப்படுத்துகின்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2023, 11:36