ҽ

பெத்லகேமின் தேவாலயம் பெத்லகேமின் தேவாலயம்  (AFP or licensors)

பெத்லகேமின் துன்பம், முழு உலகிற்கும் ஒரு திறந்த காயம்.

திருத்தந்தை பிரான்ஸிஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் புனித பூமியில் வசிப்பவர்களின் துன்பத்தில் அவர்களுக்கு துணை நிற்க அழைப்பு விடுத்துள்ளார்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

வலி மற்றும் துக்கத்தின் மத்தியில் புனித பூமியில் வசிப்பவர்களை இக்கிறிஸ்துமஸ் தருணத்தில், அப்படியே விட்டு விட விரும்பவில்லை. பிரார்த்தனையிலும் மற்றும் உறுதியான உதவிகளிலும் நாம் அவர்களுடன் துணை நிற்போம் என்று டுவிட்டர் செய்தியின் மூலம் தனது நெருக்கத்தை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.

மேலும், பெத்லகேமின் துன்பம், மத்திய கிழக்கின் துன்பம் மட்டுமல்ல, மாறாக முழு உலகத்தின் ஒரு திறந்த காயம் என்று இன்றைய டுவிட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்   திருத்தந்தை பிரான்சிஸ்.

2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 5195 ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கம் இதுவரை 1 கோடியே 86 இலட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2023, 14:29