ҽ

இயேசு பாலனை முத்தி செய்தல் இயேசு பாலனை முத்தி செய்தல்  (ANSA)

வரையறைகளுக்கு உட்பட்ட மனித வாழ்வை தேர்ந்துகொண்ட இறைவன்

திருத்தந்தை பிரான்சிஸ் : மனுவுரு எடுத்ததன் வழியாக இவ்வுலகைக் காப்பாற்றிய இறைவனின் கனிவு, முன்னெப்போதும் இடம்பெறாத ஒன்று

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைவன் காலவரையறைக்குள் உட்படாதவராக இருப்பினும், நம்மை அரவணைக்கும் மிகப்பெரும் ஆவல் கொண்டவராக, நமக்காக அவர், வரையறைகளுக்கு உட்பட்ட மனித வாழ்வை தேர்ந்துகொண்டார் என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மகத்துவம் நிறைந்தவராக இருப்பினும் இறைவன் சிறியவராக உருவெடுப்பதை தேர்ந்தெடுத்ததே கிறிஸ்மஸின் வியப்புச் செயல் என மேலும் தன் டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனுவுரு எடுத்ததன் வழியாக இவ்வுலகைக் காப்பாற்றிய இறைவனின் கனிவு, முன்னெப்போதும் இடம்பெறாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

இதே வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கர்தினால் Raymond Leo Burke, இத்தாலியின் San Marco Argentano-Scalea ஆயர் Stefano Rega, கன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Marco Moroni, திருப்பீட தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோவின் இயக்குனர் Andrea Monda ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.

மேலும், அதே நாளில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருள்பணி Vincenzo Turturro அவர்களை பரகுவாய் நாட்டிற்கான திருப்பீடத் தூதராகவும், பேராயராகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2023, 13:35