நம் இதயத்தை நாம் கண்காணிக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒவ்வொரு ஆன்மிகப் போரிலும் சாதகமான பலன்கள் அதன் தொடக்கத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நம் இதயத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதன் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
டிசம்பர் 27, இச்செவ்வாயன்று, வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான், இன்றும் இருளில் ஒளியேற்றிக்கொண்டிருப்பவர்கள், தீயவற்றை நன்மையுடன் எதிர்கொள்பவர்கள் மற்றும் அன்பின் மென்மையால் வெறுப்பின் சுழலை உடைக்கும் ஏராளமான சகோதர சகோதரிகளில் முதன்மையானவராகத் திகழ்கின்றார் என்று கூறிய திருத்தந்தையின் நேற்றைய குறுஞ்செய்தியுடன் இன்றைய நாளின் சிந்தனை மிகவும் ஒத்ததாக இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்