ҽ

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நம் உலகில் துயருறும் குழந்தைகள்தாம் இன்றைய குட்டி இயேசுக்கள்!

நம் உலகில் எத்தனையோ அப்பாவிக் குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! அவர்கள் அன்னையர்களின் வயிற்றில், விரக்தியிலும் நம்பிக்கையின் தேடலிலும் வளர்க்கிறார்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏரோதின் காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைய நம் காலத்திலும், கடவுளின் ஒளியை எதிர்க்கும் தீமை, வெளிவேடம் மற்றும் மறைவின் நிழலில் அதன் சதித்திட்டங்களைத் தீட்டுகிறது என்றும், பலருக்குத் தெரியாமல், காதுகளை முடக்கும் மௌனத்தின் மத்தியில் எத்தனை வன்முறைகளும் கொலைகளும் நடக்கின்றன! என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 28, இவ்வியாழனன்று, மாசில்லா குழந்தைகளின் விழாவைச் சிறப்பிக்கும் வேளை, தான் வெளியிட்டுள்ள இரண்டு குறுஞ்செய்திகளில் முதலாவது செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.

நம் உலகில் எத்தனையோ ஒன்றுமறியா குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! அவர்களின் அன்னையர்களின் வயிற்றில், விரக்தியிலும் நம்பிக்கையின் தேடலிலும் வளர்க்கிறார்கள் என்றும், போரினால் குழந்தைப் பருவம் சிதைந்து போன அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் இது தொடர்கிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள திருத்தத்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வகைக் குழந்தைகள்தாம் இன்றைய குட்டி இயேசுக்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2023, 14:56