அமைதிக்கான திருத்தந்தையின் விண்ணப்பம் - 24.12.23
மெரினா ராஜ் - வத்திக்கான்
டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழும்யிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் தனது விண்ணப்பங்களை இவ்வாறு எடுத்துரைத்தார். செபம், அன்பு, நிதானத்துடன் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுங்கள், நுகர்வுப் பயன்பாட்டோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். நம்மால் முடியும். கிறிஸ்தவர்களாகிய நாம் எளிமையாக, எதையும் வீணாக்காமல், தேவையான பொருட்கள் இல்லாதவர்கள் அல்லது ஆதரவற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடலாம்.
போரினால் துன்புறும் நமது சகோதர சகோதரிகளுடன் நமது உடனிருப்பை வெளிப்படுத்துவோம். பாலஸ்தீனம், இஸ்ரேல், உக்ரைன் போன்ற பகுதிகளில் வறுமை, பட்டினி, அடிமைத்தனம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களைப் பற்றி சிந்திப்போம். மனித இதயத்தை தனக்கென எடுத்துக் கொண்ட கடவுள் மனிதர்களின் இதயங்களில் மனிதநேயத்தை விதைக்கட்டும். என்று கூறி மூவேளை செப உரைக்கும் பின் வழங்கும் அமைதிக்கான விண்ணப்பத்தை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்