ҽ

திருச்சபைச் சட்டத் தொகுப்பு திருச்சபைச் சட்டத் தொகுப்பு  

திருச்சபைச் சட்டத் தொகுப்பு, கிறிஸ்துவ பிரசன்னத்தின் பிரதிபலிப்பு

இறைஞானத்திலும், செபத்திலும் மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதிலும், விடாமுயற்சியுடன் கற்பிப்பதிலும் வழிகாட்டும் தீர்ப்பாயங்கள்

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

Consociatio Internationalis Studio Iuris Canonici Promovendo இன் 50வது ஆண்டு நிறவினையொட்டி அவ்வமைப்பின் தலைவர் கியாரா மினல்லி அவர்களுக்கு அனுப்பியுள்ளச் செய்தியில், இச்சங்கம், கத்தோலிக்க திருஅவை மற்றும் பிற சமூகங்களுக்குப் பொருந்தும், நாடுகளின் மற்றும் திருஅவைகளின் சட்டம் பற்றிய ஆய்வில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த முக்கியமான துறையை முன்னேற்றுவதற்காக உலகம் முழுவதும் உள்ள திருஅவை மற்றும் பொது நிலைக் கல்லூரிகளில் இருந்து சட்ட நிபுணர்களை ஒன்றிணைக்கவும் இச்சங்கம் முயல்வதாக குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.  

சட்ட அறிவியலின் உலகளாவிய நோக்கில் திருச்சபைச் சட்டத் தொகுப்பின் ஐம்பது ஆண்டுகால ஊக்குவிப்பு என்ற கருப்பொருளைக் கொண்ட மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில்,  திருஅவையின் இத்தகைய நுட்பமான பகுதியில் அவர்களின் ஒத்துழைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு பிரதிபலிப்பு தருணமாக இருக்கும் என்று நம்புவதாகவும், அவர்கள் கடவுளின் நீதியின் கருவிகள் என்பதையும்,  அது எப்போதும் கருணையுடன் பிரிக்கமுடியாத வகையில் ஒன்றுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.   

திருச்சபைச் சட்டத் தொகுப்பு, மீட்பராம் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் பிரதிபலிப்பு மற்றும் கருணையின் உள் யதார்த்தம் என்றும், ஒருபுறம் சட்டத்தின் அடிப்படையிலும், கடவுளின் வார்த்தை மற்றும் வாழும் பாரம்பரியத்தின் வெளிப்பாடுகளிலும், ஒவ்வொரு விசுவாசியின் உறுதியான சூழ்நிலைக்கு, அவன் அல்லது அவள் கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு துணையாக இருக்க உதவவும், ஆன்மீக பகுத்தறிவு வரத்துடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும், இறைஞானத்திலும், செபத்திலும் மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதிலும், விடாமுயற்சியுடன் கற்பிப்பதிலும், அவர்கள் பணிபுரியும் மறைமாவட்டங்களின் தீர்ப்பாயங்களும் தலைமை நிர்வாகமும்  திருஅவையின் அன்றாட வாழ்க்கையில் எது அவசியம் என்பதை அடையாளம் காண வழிகாட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2023, 15:01