ҽ

திருப்பீடத்திற்கான ஹொண்டூராஸ் தூதர் நியமனம் திருப்பீடத்திற்கான ஹொண்டூராஸ் தூதர் நியமனம்  (Vatican Media)

திருத்தந்தையின் டிசம்பர் 15, வெள்ளி தின சந்திப்புகள்

ஹொண்டூராஸ் நாட்டின் நலத்துறையில் துணைஅமைச்சராகவும் பணியாற்றியுள்ள Reniery Augusto Jiménez Dubón, தன் 76ஆம் வயதில் திருப்பீடத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசமபர் 15ஆம் தேதி, வெள்ளிக்கிழமயன்று தன் பொது சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதலில் திருப்பீடத்திற்கான ஹொண்டூராஸ் நாட்டின் தூதுவர் Reniery Augusto Jiménez Dubón அவர்களைச் சந்தித்து அவரின் நியமனச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்.

புதிய தூதுவர் Reniery Augusto அவர்கள் 1947ஆம் ஆண்டு பிறந்து, மருத்துவக் கல்வியை முடித்தபின், ஹொண்டூராஸ் நாட்டின் உயர் மருத்துவமனைகளில் பல உயர்பதவிகளை ஏற்றுப் பணிபுரிந்துள்ளார்.

ஹொண்டூராஸ் நாட்டின் நலத்துறையில் துணைஅமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், தன் 76ஆம் வயதில் திருப்பீடத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே நாளில், இதுவரை திருப்பீடத்திற்கான கிழக்கு திமோர் மக்கள் குடியரசின் தூதுவராக செயல்பட்டுவந்த Juvita Rodrigues Barreto De Ataíde Gonçalves அவர்கள் பணியிலிருந்து விடைபெறும் முன் திருத்தந்தையை தன் குழுவுடன் சந்தித்து உரையாடினார்.

மேலும், உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAOவின் தலைமை நிர்வாகி Qu Dongyu அவர்களும் வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2023, 15:12