திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 14
மெரினா ராஜ் – வத்திக்கான்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இல்லாத கோடிக் கணக்கான ஏழைகளுக்காக மனதார மன்றாடுவோம். தொடர்ந்து ஏற்படும் புதிய வறுமை அலைகளை எதிர்கொள்ளும் நிலையில், அதற்குப் பழகி, தங்களது இயல்பை விட்டுக்கொடுக்கும் ஆபத்து ஏழைகளுக்கு உள்ளது. உலகின் சில பகுதிகளில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் காணப்படும் இத்தகைய வியத்தகு சூழ்நிலைகளை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. நமது வாழ்வில் நாம் ஒவ்வொரு நாளும் ஏழைகளையோ அல்லது தேவையில் இருப்பவர்களையோ சந்திக்கிறோம். சில சமயங்களில் அவர்கள் நம் அண்டை வீட்டாராகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு பெரும்பாலும் அடிப்படை வசதிகளோ அல்லது அன்றைய நாளுக்கு போதுமான உணவோ இல்லாமல் இருக்கலாம். அவர்கள் பலரிடமிருந்து விலக்கப்பட்டவர்களாக அலட்சியப்படுத்தப்பட்டவர்களாக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
உலகில் உள்ள பெரும்பாலான வளங்கள் ஆயுதங்களுக்காகவே பெருமளவில் அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் கோடிக் கணக்கான ஏழைமக்களாக இருப்பது என்பது அவமானமானது. பன்னாட்டு அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் குறிப்பிடப்படும் ஒரு பொருளாக ஏழைகள் இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் ஒரு இணைப்புப் பொருளாக முன் வைக்கப்படுகின்றன. அவர்களின் பிரச்சனைகள் இணையான பாதிப்பாகக் கருதப்படுவதில்லை. மாறாக கடமையின் காரணமாகவோ அல்லது ஒரு பிரச்சினையாகவோ தான் அவர்களது நிலை வலியுறுத்தப்படுகின்றது. ஏழைகள் எப்போதும் இறுதியிலேயே இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் குற்றவாளிகளாக அல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்க்கூடாது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்