ҽ

அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம்  

நேர்காணல் – மாதா தொலைக்காட்சியின் எதிர்நோக்கின் திருப்பயணம் - நிறைவுப்பகுதி

சமூகத்தொடர்பாளர் ‘எதிர்நோக்கின் தகவல் தொடர்பாளராக' செயல்படவேண்டும். இறைத்தந்தை தனது மகனுடனும், தூய ஆவியுடனும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றாரோ அது போல தொடர்புகொள்ள வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தகவல் தொடர்பு என்பது ஓர் இறைத்தன்மை கொண்டது  என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க தங்களுடைய கத்தோலிக்க தகவல் தொடர்புப் பணிகளால் தமிழக மக்களுக்கு அரும்பணியாற்றி வரும் மாதா தொலைக்காட்சியின் தோற்றம் பற்றி கடந்த வார நமது நேர்காணலில் மாதா தொலைக்காட்சியின் இயக்குநர் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அவர்கள் எடுத்துரைத்ததை நாம் கேட்டறிந்தோம். இன்றைய நம் நிகழ்வில் தந்தை அவர்களது பகிர்வின் நிறைவுப்பகுதியினைக் காண்போம்.

நேர்காணல் - அருள்முனைவர். டேவிட் ஆரோக்கியம்

இறைத்தந்தை தனது மகனுடனும், தூய ஆவியுடனும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றாரோ அது போல தொடர்புகொள்ள வேண்டும்.  சமூகத்தொடர்பாளர் ‘எதிர்நோக்கின் தகவல் தொடர்பாளராக' செயல்படவேண்டும். எதிர் நோக்கு என்பது ஒரு மறைக்கப்பட்ட நற்பண்பு, அது விடாமுயற்சியும் பொறுமையும் கொண்டது. சமூக தகவல் தொடர்பு என்பது நம்பிக்கைகளை வழங்கி உடன்பயணிகளாக நம்மை மாற்றவேண்டும், அச்சத்தை வழங்காமல் நம்பிக்கைகளை வழங்குவதாக அது இருக்க வேண்டும், சிறைகளில் வாழ்வோர், மிகவும் ஏழ்மை நிலையில் துன்புறுவோர் ஆகியோருக்குப் பணியாற்றவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2025, 14:20