நமது இதயங்களில் நுழைந்து வாழ்க்கையை மாற்றும் தூய ஆவியார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செபம் நமது இதயத்தை கடவுளுக்காக திறக்கின்றது, தூய ஆவியார் செபத்தின் வழியாக நம்முள் நுழைந்து நமது வாழ்க்கையை மாற்றுக்கின்றார் என்றும், நம்பிக்கையை மீண்டும் மக்கள் மனதில் உருவாக்க செபிப்பது மிக முக்கியமானது என்றும் இரண்டு குறுஞ்செய்திகளின் வழியாக தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 18 திங்கள் கிழமை ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபிக்கும்போது நமது இதயமானது தூய ஆவியானவருக்காக இடத்தை கொடுக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான செப நாளைக் கொண்டாடும் இத்தாலியின் தலத்திருஅவைகளோடு தான் ஒன்றிணைவதாகவும், முறைகேடுகள் என்பது நம்பிக்கை துரோகம் வாழ்க்கையின் துரோகம் எனவே நம்பிக்கையை மீண்டும் உருவாக்க செபிப்பதுமிக முக்கியமானது என்றும் தனது முதல் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செபம் நமது இதயத்தை கடவுளுக்காக திறக்கின்றது, தூய ஆவியார் செபத்தின் வழியாக நம்முள் நுழைந்து நமது வாழ்க்கையை மாற்றுக்கின்றார். எனவே செபிக்கவேண்டும், நமது இதயத்தைத் திறக்க வேண்டும், தூய ஆவியாருக்கு இதயத்தில் இடமளிக்க வேண்டும் என்று தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்