ҽ

Puerto Rico-விலுள்ள Ponce-வில் நடைபெற்று வரும் ஆறாவது அமெரிக்க மறைப்பணியாளர்கள் மாநாடு (CAM6) Puerto Rico-விலுள்ள Ponce-வில் நடைபெற்று வரும் ஆறாவது அமெரிக்க மறைப்பணியாளர்கள் மாநாடு (CAM6)   (CAM6)

திருஅவை அன்பு என்ற ஒரே மொழியை எப்போதும் பேசுகிறது!

இறைவேண்டல்தான் நமது பணிவாழ்வின் மையம் என்பதை இன்றைய நம் காலத்திற்கும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மறைப்பணியாளர்கள்தாம் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நம்முடைய அநீதிகளாலும், நாம் ஏற்படுத்திய துன்பங்களாலும் காயப்பட்ட இந்தப் பூமியின் முகத்தைப் புதுப்பிக்க, அவருடைய அன்பையும், உயிரளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும் ஆவியை ஊற்றும்படி இறைத்தந்தையிடம் இடைவிடாமல் கேட்போம் என்றும், நம்முடைய இறைவேண்டலை நாம் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 21, இவ்வியாழனன்று,  Puerto Rico-விலுள்ள Ponce-வில் நடைபெற்று வரும் ஆறாவது அமெரிக்க மறைப்பணியாளர்கள் மாநாட்டின் (CAM6) பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.

கடவுளின் கனிவால் தொட்ட குழந்தைகளாக நம்மை அடையாளம் காணும் பணியின் அடித்தளம் இதுதான் என்றும், நம்மிடம் இல்லாததை கொடுக்க முடியாது, நாம் அனுபவிக்காததை, நம் கண்கள் காணாததை, நம் கைகள் தொடாததை வெளிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பணியின் அடித்தளம் கடவுளின் அனுபவம், இயேசுவின் அன்பில் சந்திப்பு என்றும், அவர் நமக்கு ‘நற்செய்தியை’ வெளிப்படுத்துகிறார், அவர் நமக்கு இறைத்தந்தையைக் காட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமுழுக்குப் பெற்றவரின் இறையழைத்தல் என்பது கடவுளைப் பார்க்கவும், உலகில் நம் சகோதரர் சகோதரிகளில் அவரைக் காணவும், கிறிஸ்துவின் கண்களையும், அவர்களை வரவேற்கும் கிறிஸ்துவின் இரக்கமிகு பார்வையையும்  நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நமது இறைவேண்டல் நமக்கு உணர்த்துகிறது என்றும் விளக்கியுள்ளார்.

நம் உள்ளத்தில் பொங்கி வழியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தோற்றம் என்றும், உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த பிறகு சீடர்கள் அடைந்த மகிழ்ச்சி, அதை அவர்களால் அடக்க முடியவில்லை, அது அவர்களின் பயணத்தைத் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

தூய ஆவியார் இந்த வியப்பை நம்மில் ஏற்படுத்துகிறார், மேலும் கடவுளிடமும் (உரோ 8,14) மற்றும் மனிதர்களிடமும் (மத் 10,19) உரையாற்றுவதற்கான வார்த்தைகளை நமக்குள் வைக்கிறார் என்றும், இதனால்தான், திருஅவையின் தொடக்க முதல், மேல் அறையில் திருத்தூதர்கள் மரியாவுடன் கூடிய சபையில், அவர்கள் செய்யும் முதல் காரியம் ஆவியானவரை அழைப்பதாக அமைந்துள்ளது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

தூய ஆவியாரின் உயிர் கொடுக்கும் வல்லமையின் வழியாக நாம் எந்த மொழியிலும் செய்தியை அனுப்ப முடியும், ஆம், திருஅவை எல்லா மொழிகளையும் பேசுகிறது, ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அது எப்போதும் அன்பு என்ற ஒரே மொழியைப் பேசுவதால் அது எல்லா மக்களுக்கும் புரியும், ஏனென்றால் அது அதனுடைய சாராம்சத்தின் ஒரு பகுதியாகும், அது கடவுளின் உருவமாக இருக்கிறது என்றும் விவரித்துள்ளார் திருத்தந்தை.

இந்த வழியில், ஆவியாரின் மகிழ்ச்சி அவர்களுடன் மட்டும் முடிவடையாது, ஆனால் அது தன்னைத்தானே தொடர்பு கொள்கிறது என்றும், கடவுளின் உண்மையுள்ள மக்களாக, ஒருங்கிணைந்து பயணித்தல் மற்றும் ஒருவருக்கொருவர் செவிமடுப்பதில் ஒன்றிணைந்து பயணிக்க நம்மை அழைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2024, 15:37