நேர்காணல் - பாடகர்களின் பாதுகாவலியான புனித செசிலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
“இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிடுவேன். அவரை மறுதளிக்கமாட்டேன் என்று கூறி கிறிஸ்துவிற்காக துன்புற்று கொலை செய்யப்பட்டார் புனித செசிலி. ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம் என்பதற்கேற்ப இறைப்புகழ் பாடி இறையடி சேர்ந்தவர் புனித செசிலி. பாடகர்களின் பாதுகாவலியாகத் திருஅவையால் சிறப்பிக்கப்படும் தூய செசிலியின் திருவிழாவை நவம்பர் 22 இன்று கொண்டாடும் வேளையில் இப்புனிதர் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை சூ. டக்ளஸ் மில்டன் லோகு, அவர்கள் இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தற்போது உரோமில் உள்ள திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை தொடர்பாடல் துறையில் முதுமாணி ( licentiate ) பட்டவியலுக்காக முதல் ஆண்டில் பயின்று வருகின்றார். தந்தை அவக்ரளை பாடகர்களின் பாதுகாவலியான புனித செசீலி பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்